சமூகநல பல்மருத்துவத்துறை

சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

 

பல் எடுத்தபின் கவனிக்க வேண்டியவை

 

1.       பல் எடுத்த இடத்தில் வைத்துள்ள பஞ்சை 3௦ நிமிடங்களுக்கு அழுத்தமாக பற்களால் கடித்துக் கொள்ள வேண்டும்.

2.       பல் எடுத்த அரை மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம், குளிர்ந்த பழச்சாறுகளை அருந்தலாம்.

3.       பானங்களை அருந்தும் போது பானக்குழலை (Straw) தவிர்க்கவும்.

3.       பல் எடுத்த அரை மணி நேரத்திற்கு பின்பு அதிக வலியோ (அ) ரத்தக்கசிவோ இருந்தால், மருத்துவரை அணுகவும்.

4.       மருத்துவர் பரிந்துரையின்படி மருத்துகளை உட்கொள்ளவும்.

 

தவிர்க்க வேண்டியவை:

 

5.       வாயில் எச்சிலை விழுங்குதல் வேண்டும். எச்சில் துப்புதலை தவிர்க்கவும்.

6.       பல் குச்சி முதலியவை, பல் எடுத்த இடத்தில் உபயோகிக்க கூடாது.

7.       புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது.

8.       பல் எடுத்த இடத்தில் விரல் (அ) நாக்கால் தொடுதல் கூடாது.

9.       பல் எடுத்த 2 மணி நேரத்திற்கு, சூடான கடினமான உணவுப் பொருள்களை உட்கொள்வதை தவிர்க்கவும்.